இன்னும் 2 நாட்களில் நல்ல சேதி வரும்..! ஆண்டவரின் அதிரடி அறிவிப்பு.!!
Kamal Hassan declare election alliance within 2days
திமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் இரு நாட்களில் அறிவிக்கப்படும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதில் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நடிகர் கமலஹாசன் தற்போது வெளிநாடு பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பி உள்ளதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அரசியல் கழம் சூடு பிடித்த தொடங்கியுள்ள இந்த சூழலில் கமலஹாசன் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது
English Summary
Kamal Hassan declare election alliance within 2days