தாக்குதலுக்குள்ளான தலித் மக்கள் மீதே வழக்குத் தொடுப்பதா? என்னங்க இதெல்லாம் - கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் கிராமத்தில் தலித் மக்கள் மீது இதர சமூக மக்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இதர சாதியினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் மீதே அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதனை கண்டித்தும், தலித் மக்களைத் தாக்கிய இதர சமூக மக்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்திட வேண்டுமெனவும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அஞ்செட்டி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் பஞ்சாயத்து, கோட்டையூர் கிராமத்தில் 70 தலித் குடும்பங்களும், 250க்கும் மேற்பட்ட இதர சாதியைச் சேர்ந்த குடும்பங்களும் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் 12.04.2023 மற்றும் 13.04.2023 ஆகிய தேதிகளில் கோட்டையூர் அருகே ஜீன்மாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு தலித் மக்களும் சென்றுள்ளனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த மரிலிங்கா என்பவர் தலையில் தொப்பி அணிந்து சென்றுள்ளார். அப்போது இதர சாதி வகுப்பைச் சார்ந்த அருண், மோகன் ஆகியோர் மரிலிங்காவை வழிமறித்து கேலி செய்து தொப்பியை எடுத்துள்ளனர். 

எதற்கு தொப்பியை எடுக்கிறீர்கள் என்ற கேட்ட மரிலிங்காவை அவர்கள் பிளேடால் கையை அறுத்துள்ளனர். அன்று இரவு இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்றவர்களை சகித்துக் கொள்ள முடியாத இதர சாதியினர் ஒன்று திரண்டு தலித் மக்களை அரிவாள், கம்பு, கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் 1. மரலிங்கா, 2. ரவி, 3. மது, 4. பசம்மா, 5. அபி, 6. கங்காதரன், 7. சிவா, 8. சிவம்மா, 9. விஜயா ஆகியோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வளவு பிரச்சனைகளும் அஞ்செட்டி காவல்துறை ஆய்வாளர் முன்பே நடைபெற்றுள்ளது. முன்கூட்டியே தகவல் தெரிந்தும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், கடுமையாகத் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தலித் மக்கள் ஆறு பேர் மீது 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதானது தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, கோட்டையூர் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், அவ்வூரில் இதர சாதியினர் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதர சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் அஞ்செட்டி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Balkrishanan condemn and leter to CM Stalin Kottaiyur issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->