ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கும் ஓபிஎஸ்! போட்டு உடைத்த முக்கிய புள்ளி!
Jayakumar criticized OPS to act in Rajinikanth next film
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ரஜினியை ஓபிஎஸ் நேரில் சந்தித்து அவரது அடுத்த படத்தில் நடிக்க குணச்சித்திரர் கதாபாத்திரம் ஏதேனும் கேட்டிருப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் ரஜினியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "ரஜினியை சந்தித்ததால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏதேனும் நடிக்க கேட்டிருப்பார்" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Jayakumar criticized OPS to act in Rajinikanth next film