சூப்பர் கருத்து! நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்துவது தவறு...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
It wrong to pollute nature for our luxury Chief Minister MK Stalin
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி, உலகம் முழுக்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ''உலக சுற்றுச்சூழல் தினம்'' கடைப்பிடிக்கப்படுகிறது.

அவ்வகையில் இன்று 'உலக சுற்றுச்சூழல் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை பலரும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டதாவது, "நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! "என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு கருத்து பதிவில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
It wrong to pollute nature for our luxury Chief Minister MK Stalin