ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த படம் வெளிவருவத்தில் சிக்கல் அதிரடி தடை போட்ட முக்கிய நபர்! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை தி அயர்ன் லேடி என்ற பெயரில் நித்யா மேனன் நடிப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது.  ஏ.எல். விஜய்  இயக்கத்தில் தலைவி  என்ற பெயரில் ஒரு படமும்  தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் வெப் சீரிஸாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிவருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. 

இந்த வெப் சீரியஸ்க்கு  குயின் என பெயரிடப்பட்டுள்ளது, 18-30 வயதான கதாப்பாத்திரத்தை நடிகை அஞ்சனாவும் அதனை தொடர்ந்து ஜெயலலிதா ரோலில் படையப்பா புகழ் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடிக்கிறார்.

ஜெயலலிதா வழக்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் கௌதம்மேனன் திரை உலகில் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டம் சம்பாதித்து  வைத்து இருப்பவர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் குறியிப்பதாவது, தனது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமோ, வெப் சீரிஸாக யாரும் எடுக்க கூடாது என  தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெப் சீரியஸ் தொடருக்கு இதுவரை அனுமதி பெறவில்லை எனவும் தீபக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

issue in jayalalitha biopic


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->