திமுகவை விட அதிமுகவையே தவெக அதிகமாக டார்கெட் செய்கிறதா? விஜயால் மாறும் களம்? செங்கோட்டையன் மீது செம்ம கடுப்பில் எடப்பாடி!
Is Tvk targeting AIADMK more than DMK Will Vijay change the field A sharp attack on Sengottaiyan
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக–பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக பாஜகவுக்கு அதிர்ச்சியாக, தவெக (விஜய்) தரப்பில் இருந்து மிக வேகமான அரசியல் ஆட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு முக்கிய காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி தவெகவை சேர்ந்த செங்கோட்டையன் தான் சொல்லப்படுகிறார். பல ஆண்டுகளாக அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர்–ஜெயலலிதா காலத்தைத் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி காலம் வரை, அனைத்து முக்கிய கட்சி தலைவர்களுடனும் நெருக்கம் வைத்திருந்தவர்.
இந்நிலையில் அவர் எதிரணியான தவெகவில் சேர்ந்ததும், 2026 கூட்டணி அரசியலில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் ரகசியமாக பேசிய கட்சிகள்
அதிமுக–பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இருக்கும்
இரண்டுடனும் தவெக சார்பில் செங்கோட்டையன் பேச்சு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிமுக–பாஜக உயர்தளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் சென்றால் பாமக, தேமுதிக ஆகியோருக்கு 25–30 சீடுகளே கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் தவெக தரப்பு, செங்கோட்டையன் வழியாக, இந்த இரு கட்சிகளுக்கும் தலா 40 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என முன்மொழிந்திருக்கிறார் என கூறப்படுகிறது.
இதனால் இந்த இரு கட்சிகளும் சீரியசாக தவெக கூட்டணியைப் பரிசீலிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 தேர்தலுக்கான கூட்டணியை இறுதிப்படுத்த அமித்ஷா விரைவில் தமிழகத்திற்கு வர உள்ளார்.
இதற்குள் செங்கோட்டையன் செய்யும் இந்த நகர்வுகள் கூட்டணியில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளன.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்காமல், அவர்களை தனிக் கட்சி உருவாக்கி கூட்டணியில் இணைக்கலாம் என எடப்பாடி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸும் தவெகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், செங்கோட்டையனின் சமீபத்திய அரசியல் மூவ்கள் தவெகையை மிகப்பெரிய அரசியல் சக்தியாக கட்டியெழுப்பும் வகையில் உள்ளது.
செங்கோட்டையன்–விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுக–பாஜக கணக்குகளை மாற்றியுள்ளது
2026 தேர்தலை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது
அடுத்த நகர்வு யாரிடம்? Vijay Team-ஆ? அதிமுக-ஆ? பாஜக-ஆ?
இதற்கான பதில் வரும் வாரங்களில் தெளிவாகலாம்.
English Summary
Is Tvk targeting AIADMK more than DMK Will Vijay change the field A sharp attack on Sengottaiyan