அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த மாணவனுக்காக அழுவாரா? இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? த.வெ.க கேள்வி!
TVK Arunraj condemn to DMK Mk Stalin govt student death
தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவக் குழந்தை மரணமடைந்த செய்தி இதயத்தை இடியென தாக்குகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என தனியார் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாட்டாளர்களை வைத்து ஷோ காட்டிய பணத்தை வைத்து, இது போன்ற பள்ளிகளின் கட்டுமானத்தை உறுதி செய்திருக்கலாமே முதலமைச்சர் அவர்களே?
அலங்கார சொற்களை வைத்து ஏட்டு சுரைக்காய் திட்டங்களை ஊடகங்களில் மட்டுமே தீட்டி வரும், மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த மாணவனுக்காக அழுவாரா? இனியும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படா வண்ணம் தடுப்பாரா?
English Summary
TVK Arunraj condemn to DMK Mk Stalin govt student death