இந்து மக்களின் நம்பிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் முரண்பாடான வாதம் - திமுக அரசுக்கு பாஜக கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "#"கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம், ஆனால், ஓரிடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும்"

#மத்திய பிரதேசத்திலிருந்து மதுரைக்கு வந்த சமண துறவிகளான திகம்பரர்கள் ஆடைகள் அணியாமல் இருந்த நிலையில்  (நிர்வாணமாக) யார் கண்களிலும் படாமல் திருப்பரங்குன்றம் மலையில் வாழ்ந்தார்கள். இரவு நேரங்களில் திகம்பரர்கள் அனைவரும் கூடி பேசும் போது அந்த தூணில் தான் விளக்கு ஏற்றுவார்கள். ஆகையால் அது கார்த்திகை தீபத்துக்காக அல்ல#

: ஹிந்து அறநிலையத்துறை வழக்கறிஞர் 'நேற்று'.

என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம், ஏன் பேசுகிறோம் என்று தெரியாமல், மதி கெட்டு பதட்டத்தோடு தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்யாத நிலையில் நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதோடு, கோவில் நிர்வாகத்தின் சார்பாக கடவுளையே விமர்சிக்கும் வகையில் வாதம் புரிவது அருவெறுக்கத்தக்கது. நேற்று வரை அது ஆங்கிலேயர்கள் வைத்த எல்லை கல் என்று சொன்னவர்கள் இன்று அது சமணர்களின் தூண் என்று சொல்வது அவர்களின் குழப்ப மனநிலையையே உணர்த்துகிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் கடந்த மூன்று நாட்களில்……..

1. “அது தீபத்தூண் இல்லை, நில அளவை கல்”: ஹிந்து அறநிலையத்துறை .

2.  “அது தீபத்தூண் இல்லை, அது சமண திகம்பர்கள் இரவு நேரங்களில் கூடும் போது விளக்கு ஏற்றி வந்தனர்” : கோவில் நிர்வாகம்.

3. “தீபத்தூண் இருப்பதாக சொல்லப்படும் இடம் கோவிலுக்கு சொந்தமானதல்ல, தர்காவுக்கு சொந்தமானது” : வக்ஃப் வாரியம்.

கடந்த மூன்று நாட்களில், ஹிந்து அறநிலையத்துறை, கோவில் தரப்பு, காவல் துறை தரப்பு மற்றும் வக்ப் வாரியத்தின் வழகறிஞர்களால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் தான் மேற்கண்டவை. எப்படியாவது நீதியரசர் ஜி ஆர் ஸ்வாமிநாதன் அவர்களின் தீர்ப்பை எதிர்த்து பேச வேண்டும் என்கிற பதட்டத்தில் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு வாதங்களை முன் வைத்து திராவிட மாடல் திமுக அரசுக்கு முட்டுக்கொடுத்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. 

ஹிந்து மக்களின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் முரண்பாடான வாதங்களை முன்வைத்து மக்களை முட்டாள்கள் என எண்ணி பெரும்பான்மை மக்களை ஏமாற்றும் நயவஞ்சக திராவிட மாடல் அரசியலை முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp narayanan condemn to DMK Govt thirupurangundram issue


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->