தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை இல்லை: விசாரணையில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு!
thirupurangundram case DMK govt
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் தொடர்பாகத் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
தலைமைச் செயலருக்கு விலக்கு இல்லை:
கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஆகியோர் நாளை ஆஜராகுமாறு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு விலக்கு அளிக்கக் கோரி அரசு சார்பில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்து, "நாங்கள் உத்தரவிட முடியாது; ஆஜராவதில் விலக்கு அளிப்பது குறித்துத் தனி நீதிபதியிடமே கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தனர்.
தடையை ஏற்க மறுப்பு:
மலை உச்சியில் உள்ள தூண் நில உரிமை தொடர்பாக வக்பு வாரியம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் உரிமை கோரப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான அவமதிப்பு வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தனி நீதிபதியின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதன் காரணமாக, இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
English Summary
thirupurangundram case DMK govt