இரும்பு மனிதர்’ நினைவு தினம்...! - சர்தார் படேலை நினைவுகூர்ந்த அண்ணாமலை...!
Iron Mans Memorial Day Annamalai commemorates Sardar Patel
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்தியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சர்தார் வல்லபாய் படேல்.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய வரலாற்றுச் சிற்பியாக அவர் போற்றப்படுகிறார்.இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றழைக்கப்படும் பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேல், சுதந்திரப் போராட்ட காலத்தில் தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராக சட்டப் போராட்டங்களையும், அறவழிப் போராட்டங்களையும் முன்னணியில் நின்று நடத்தினார்.
அதனால் அவர் சுதந்திரப் போராட்டத்தின் தைரியமான சிப்பாய் என அழைக்கப்பட்டார்.இந்திய விவசாயிகளின் ஆன்மாவாகவும், நவீன இந்தியாவின் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய தலைவராகவும் திகழ்ந்த அமரர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தில், அவரது சேவைகளையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து வணங்குகிறோம் என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Iron Mans Memorial Day Annamalai commemorates Sardar Patel