குட் பேட் அக்லி’க்கு பின் மீண்டும் ஆதிக்-அஜித் கூட்டணி…! ‘ஏகே 64’ல் இணையும் பிரபல நடிகை...?
After Good Bad Ugly Adhik Ajith team up again Famous actress join AK 64
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அஜித்குமார் ரசிகர்களுக்கு முழுமையான மாஸ் ட்ரீட்டாக அமைந்த இந்த படத்தில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்குமாரின் நடிப்பில் உருவாகும் இந்த புதிய படம், அவரது 64-வது திரைப்படமாக இருக்கும்.
தற்போது இந்த படத்திற்கு தற்காலிகமாக “ஏகே 64” என பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளதாகவும், இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், “ஏகே 64” படத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தகவலின்படி, முன்னணி நடிகை ரெஜினா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ரெஜினா அஜித்குமாருடன் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
After Good Bad Ugly Adhik Ajith team up again Famous actress join AK 64