'பிரதமர் மோடி சொத்து' சர்ச்சையாக வீடியோ போட்ட, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சில மாதங்களுக்கு முன் நம்பிக்கை இல்லா ஓட்டெடுப்பில் தனது பிரதமர் அதிகாரத்தை இழந்தார். இதனை தொடர்ந்து, புதிய பிரதமராக செபாஷ் ஷெரிப் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். 

இவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் செரிப்பின் சகோதரர். பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் வரலாறு காணாத மழை பெய்த காரணத்தால் பாகிஸ்தானின் பெரும் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 

அவ்வளவுதானா பாகிஸ்தான்...? : ஓடி ஒளிந்த இம்ரான்...ஓட்டம் பிடித்த  சபாநாயகர்...!! - Seithipunal

இது நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் செபாஷ் செரிப்பை இம்ரான் கான் கடுமையாக விமர்சிக்கிறார். சமீபத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நவாஸ் ஷெரீப்புக்கு ஏராளமான சொத்துக்கள் வெளிநாட்டில் இருக்கின்றது. 

அவர்களது சொத்து மதிப்பு யாராலும் கணக்கிட முடியாத அளவிற்கு அதிகமாகவுள்ளது. உலகில் வேறு எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இந்த அளவிற்கு சொத்துக்கள் கிடையாது. நமது பக்கத்து நாடான இந்திய பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்று கூட பாருங்கள். அவர் மிகவும் எளிமையானவர்." என்று புகழ்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran khan about pm modi assets


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal