11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு...! - 'மீள்திறன், புத்தாக்கம்' என்ற கருப்பொருளுடன் டெல்லியில் தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாடு...! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், ஈரான் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

“மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையை கட்டமைத்தல்” என்ற முக்கிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இருநாள் மாநாட்டில் உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, எதிர்கால சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leaders 11 countries participate BRICS Summit begins Delhi theme Resilience Innovation


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->