மேற்காசிய போர் தாக்கம்: நம் மக்களை காக்க நீங்கள் தயாரா...? - பிரதமர் மோடிக்கு மு க ஸ்டாலின் கடும் கேள்வி
Impact West Asian War Are you ready protect our people MK Stalin tough question Prime Minister Modi
மேற்காசியப் போரின் தாக்கம் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் பதிலடி அளித்துள்ளார். “மக்களை தயாராக இருக்கச் சொல்வதற்கு பதிலாக, அவர்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது?” என அவர் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தள பதிவில், மார்ச் 11ஆம் தேதியே சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்யவும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக முதல்வர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 14ஆம் தேதிக்குள் தமிழக அரசு தன்னிச்சையாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சாரச் செலவைக் குறைக்கும் வகையில் உணவு தயாரிப்பு மையங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மானியம், சிறு தொழில்களுக்கு மின்சாதனங்கள் வாங்க சலுகை கடன், தொழிற்சாலைகளுக்கு மாற்று எரிபொருள் பயன்பாட்டில் தளர்வு உள்ளிட்ட பல உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உழவர் சந்தைகளில் விவசாயிகள் தடையின்றி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.“இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும், மத்திய அரசு மக்களை பாதுகாக்க எந்த திட்டத்தை வகுத்துள்ளது?” என்ற கேள்வியை முன்வைத்து, “நாட்டின் மக்கள் இன்று எதிர்பார்ப்பது ஒரே பதில். அரசு எங்களை காப்பாற்றத் தயாராக இருக்கிறதா?” என ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Impact West Asian War Are you ready protect our people MK Stalin tough question Prime Minister Modi