முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - சமக தலைவர் சரத்குமார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 'கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண நலம் பெற்று, வழக்கமான ஆட்சி பணிகளை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என சமத்துவக் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I pray to God for the speedy recovery of Chief Minister M. K. Stalin SMK leader Sarathkumar


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->