முறைகேடுகளில் இருந்து திசை திருப்பவே ஹிஜாப் பிரச்சனை! அண்ணாமலை குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


ஆளும் கட்சி சார்பில் நடத்தப்பட்ட முறைகேடுகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே மதுரை மேலூர் வாக்குச்சவடியில் ஹிஜாப் பிரச்சனை எழுப்பபட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

தமிழக மக்கள் மத்தியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது என்றார்.

இந்த தேர்தலில் பண பலமும், குண்டர்கள் மூலம் அட்டூழியம், உள்ளிட்டவை நடைபெற்ற போது தேர்தல் ஆணையம் அதை வேடிக்கை பார்த்தது என்றும்,

இவ்வாறான முறைகேடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் புகாரை ஆளும் கட்சியினர் சார்பில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

ஆளும் கட்சியினரின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே பொதுமக்கள் வாக்களிக்க வராததால் வாக்குப்பதிவு விழுக்காடு குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hijab Problem Annamalai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->