ஆம் ஆத்மி தலைவரை தட்டி தூக்கிய காங்கிரஸ்!
Haryana Assembly Election AAP Leader Joint to Congress
ஹரியானாவில் வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறன.
காங்கிரஸ் கட்சி இதுவரை காங்கிரஸ் கட்சி மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், எஞ்சிய 4 இடங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியலையை வெளியிட்டு வருகின்றன.
ரோஹ்டக்கில் வேட்பாளராக இருந்த ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரும், தலைவருமான லவ்லீன் துதேஜாவை வேட்பாளராக அறிவிக்காமல், பைஜேந்திர ஹூடாவை ஆம் ஆத்மி களமிறக்கி உள்ளது.
இந்நிலையில், லவ்லீன் துதேஜா மற்றும் அவரது ஆதரவாளர்களும் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா காங்கிரஸில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
English Summary
Haryana Assembly Election AAP Leader Joint to Congress