அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பசுமைப் பள்ளிகள் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு..!
Green Schools Project at an estimated cost of Rs 20 crore Minister Thangam Tennarasu
100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பசுமைப் பள்ளிகள் திட்டம் உருவாக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது தொடர்பில், சட்டசபையில் நிதித்துறை மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் வாயிலாக, பள்ளிகளில் சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு மூலம் மின் விளக்குகள், பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், உர உற்பத்தி, காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் இல்லா சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சாலைவழி வாகனங்களின் உமிழ்வு வெளியீட்டை தொலைவில் இருந்து கண்காணிக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முன்னோட்ட அடிப்படையில் வாகன உமிழ்வைத் தொலைவில் இருந்து கண்காணிக்கும் முறையை ரூ.15 லட்சம் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Green Schools Project at an estimated cost of Rs 20 crore Minister Thangam Tennarasu