தமிழ்நாடு யாருடன் போராடுகிறது? திமுகவின் விளம்பரத்தை விமர்சித்த ஆளுநர்!
Governor RN Ravi Tamilnadu DMK
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202வது பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அதில், வள்ளலாருக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடித்து வருகிறார்; அவர் வாழும் வாழ்க்கை இதனைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் தமிழகத்தின் நிலை இன்னும் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் தலித் சமுதாயத்தின் உரிமைகள் முழுமையாக காக்கப்படவில்லை; அறிவும் சமூக மரியாதையும் தாழ்வாகவே உள்ளது. வள்ளலார் கூறியது இதுதான் என நினைவூட்டினார்.
மேலும், தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை, சண்டை ஏற்பட்டதில்லை என்றாலும், தான் பயணிக்கும் இடங்களில் “தமிழ்நாடு போராடும்” என சுவர்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு யாருடன் போராடுகிறது? இங்கு எந்த பிரச்னையும் இல்லை. நம் நோக்கம் தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது தான்" என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்திய உரைகளில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்”, “தமிழ்நாடு வெல்லும்”, “தமிழ்நாடு போராடும்” என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Governor RN Ravi Tamilnadu DMK