'பறிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் எடுத்துக்கொள்வோம்': ஆர் ஆர் எஸ் மோகன் பகவத் சூளுரை..! - Seithipunal
Seithipunal


'இந்தியாவில் இருந்து பறிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் எடுத்துக்கொள்வோம்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: சிந்தி சகோதர்கள் இங்கு நம்முடன் அமர்ந்து உள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  அவர்கள் பாகிஸ்தானுக்குள் செல்லவில்லை. அவர்கள் பிரிவுபடாத இந்தியாவிற்குள் சென்றனர். சூழ்நிலைகள் காரணமாக பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வீடு. ஆனால், சிலர், வீட்டில் இருந்த ஒரு அறையை (காஸ்மீர்) ஆக்கிரமித்துள்ளனர் என்றும், அதில் தான் நான் எனது மேஜை, இருக்கை மற்றும் ஆடைகளை வைத்து இருந்தேன். அந்த அறையை அவர்கள் ஆக்கிரமித்து கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். நாளையே அதனை நான் எடுத்துக் கொள்வேன். பிரிவுபடாத இந்தியாவை என்றும் நாம் நினைவில் வைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் அராஜகம், பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அங்கு வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாகிஸ்தான் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஆணவம் காரணமாக இந்தப் போராட்டம் நிகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மோகன் பகவத் ஆர்எஸ்எஸ் இவ்வாறு பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RRS chief Mohan Bhagwat vows to reclaim occupied Kashmir


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->