'விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார்': அமித்ஷா திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மஹராஷ்டிரா மாநிலத்துக்கு சென்றுள்ள்ளார். அங்கு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தபட்ட விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்ட போது அவர் பேசியதாவது:-

மஹராஷ்டிராவில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், இருந்து போது பா.ஜனதா தலைமையிலான அரசு, அவுரங்காபாத்தின் பெயரை அகில்யாபாய் என்று மாற்றம் செய்தது. இதுமாதிரியான முடிவுகளை சத்ரபதி சிவாஜி மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டம் (அகில்யாநகர்) அகில்யா பாயின் பெயரோடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், கனமழை காரணமாக மராட்டியத்தில் 60 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் தன்னுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அரசு விரிவான அறிக்கையை அளிக்க உத்தரவிட்டுளேன் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார் என்றும், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல, நவராத்திரிக்கு முன்பாக, 395 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.(சரக்கு சேவை வரி)யை பிரதமர் மோடி குறைத்துள்ளதாகவும், பல அத்தியாவசியப் பொருட்களுக்கு இப்போது ஜி.எஸ்.டி. வரியே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah assures that Prime Minister Modi will never delay in helping farmers


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...


செய்திகள்



Seithipunal
--> -->