காங்கிரஸ் மட்டும் சுதந்திரத்திற்காக போராடவில்லை..!! ஆளுநர் ஆர்.என் ரவியின் பரபரப்பு பேச்சு..!! - Seithipunal
Seithipunal


திருச்சி நேஷனல் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம் இணைந்து நடத்திய சுதந்திர அமுது பெருவிழா நிகழ்ச்சியுடன் பாரதியார் பிறந்தநாள் மற்றும் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் பிறந்த தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார்.

விழா மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி "இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேசிய காங்கிரஸ் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர். ஆனால் சுதந்திரப் போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. எனவே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தும் வகையில் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்" என பேசியுள்ளார். ஆளுநரின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

மேலும் நேஷனல் கல்லூரியில் பயின்று வரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆளுநரை சந்தித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் "நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தும் போது படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார். வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RN Ravi spoke Congress is not alone fighting for freedom


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->