விழித்துக் கொள்ளுமா விடியல் அரசு? தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் அரசு கண்டுகொள்ளுமா...?- நயினார் நாகேந்திரன்
government wake up Will government only notice if we remind it once a day Nainar Nagendran
பா.ஜ.க. மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?

தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை செய்யவும் எங்கள் தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது! விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு? என்று வினவியுள்ளார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
government wake up Will government only notice if we remind it once a day Nainar Nagendran