கரூர் துயர நினைவில் விசிக அஞ்சலி! அரசியல் நெருக்கடிகளை முற்றிலும் தவிர்க்க விஜய்க்கு வேண்டுகோள்!-திருமாவளவன்
Tribute Visika memory Karur tragedy Request Vijay completely avoid political crises Thirumavalavan
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிற பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது,"நாம் விஜய் மீது எந்தவொரு வன்முறையையும் காட்டவில்லை. அவரை கைது செய்யுமாறு வலியுறுத்தவில்லை. இந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் விமர்சன நோக்கம்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் இந்த விசாரணையில் திருப்தியளிக்கின்றன. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இதனை அரசியலாக்கி வருகின்றனர்.விஜயை சுட்டிக் காட்ட அரசியல் சக்திகள் முயற்சிக்கலாம்; ஆனால் அவர் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடந்த தாக்குதல் முயற்சியை விசிக கடுமையாக கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாகும். மேலும், ராகேஷ் கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (POTA) உடன்பட நடவடிக்கை எடுக்க கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tribute Visika memory Karur tragedy Request Vijay completely avoid political crises Thirumavalavan