பிரபல ஓட்டலில் கஞ்சா பார்ட்டி - சென்னையில் 18 பேர் கைது.!!
18 peoples arrested for drugs party in chennai
சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் பப் ஒன்றில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓட்டல் அறைகளில் சோதனையிட்டனர்.
ஆனால், அங்கு யாரும் இல்லாததால், அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் அந்த பார்ட்டியில் பங்கேற்றதும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்கள் 18 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது 3 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 18 செல்போன்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
English Summary
18 peoples arrested for drugs party in chennai