தவறான சிகிச்சையால் கையை இழந்த சிறுமி - 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்.!!
2 doctors suspend for wrong treatment to girl in kerala
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் பல்லசனா பகுதியை சேர்ந்தவர் வினோதினி. இவர் தனது சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்த போது வலது கையில் படுகாயம் ஏற்பட்டதால் பெற்றோர் சித்தூர் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைற்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் கையில் மருத்துவர்கள் பிளாஸ்டர் போட்டுள்ளனர். அதன் பிறகு சிறுமி வலது கையில் வலி தாங்க முடியாமல் துடித்ததுடன், வலது கையில் ரத்த ஓட்டம் குறைந்து இருந்ததோடு, கருப்பாகவும் இருந்தது.
இதையடுத்து சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிறுமியின் வலது கையை வெட்டி அகற்றினர். பாலக்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார். அதன் படி விசாரணை நடத்தப்பட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை செய்ததாக மருத்துவர்கள் முஸ்தபா, சர்பராஸ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 doctors suspend for wrong treatment to girl in kerala