பாஜக நிர்வாகி சுட்டு படுகொலை! கொந்தளிப்பில் ஒடிசா பாஜகவினர்! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பிட்பாஷ் பாண்டா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான பிட்பாஷ் பாண்டா, நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடியுள்ளனர். கடுமையாக காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், காவல்துறை விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கியது. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் தலைவர் சரவண விவேக் தெரிவித்தார்.

பிட்பாஷ் பாண்டாவின் உடல் இன்று காலை குடும்பத்தினரின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மரணத்தால் பெர்ஹாம்பூர் முழுவதும் துக்கம் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தக் கொலைக்கான கண்டனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளன. ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha Ganjam BJP functionary Pitbash Panda shot dead 


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->