காவல்துறை தோல்வி... தமிழகம் அழிவுப் பூங்காவாக மாறிவிடும்... பாஜக நாராயணன் கண்டனம்!
BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகளை வீசி, வெங்கடேசன் என்ற மின் வாரிய ஊழியர் ஒருவரை வெட்டியிருக்கிறது ஏழு பேர் கொண்ட ஒரு கும்பல்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அம்பேத்கர் நகரில் நடுத்தெருவில் பைக் ரேஸில் ஈடுபட்ட ரௌடி கும்பலை தட்டிக் கேட்ட வெங்கடேசனை கடுமையாக தாக்கியிருக்கிறது இக்கும்பல்.
குற்றம் நடந்த சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் இந்த ரௌடி கும்பலை பிடித்து விட்ட போதிலும், இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிப்பதை தடுக்க முடியாதது தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைவையும், தமிழக அரசின் நிர்வாகமின்மையையும் தோலுரித்து காட்டுகிறது இந்த சம்பவம்.
குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் அதை செய்தவர்களை கண்டுபிடிப்பதை விட குற்றங்கள் நிகழா வண்ணம் தடுப்பது தான் காவல்துறையின் தலையாய கடமை.
குற்றங்களை தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கை பேணிகாக்கவும் தான் வானளாவிய அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கடந்த சில வருடங்களாக செயின் பறிப்பு, உயிர் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாத காவல்துறையின் தோல்வி வருந்தத்தக்கது.
முழுமையான அரசியல் தலையீடும், அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிகரித்ததும் இந்த நிலைக்கு மிக முக்கிய காரணங்கள். இது தொடர்ந்தால் அமைதிப் பூங்கா என்றழைக்கப்பட்டு வந்த தமிழகம் அழிவுப் பூங்காவாக மாறிவிடும்" என்று நாரயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt