சாதிவாரி கணக்கெடுப்பு: கர்நாடகாவில் பள்ளிகளுக்கு மற்றும் 10 நாள் தொடர் விடுமுறை!
karnataka caste survey school leave
கர்நாடகாவில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 8 முதல் 18 வரை விடுமுறை அறிவிக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மாநில மக்களின் சமூக மற்றும் கல்வி நிலையைப் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, முதலில் அக்டோபர் 8க்குள் நிறைவு பெற வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சில மாவட்டங்களில் பணிகள் தாமதமடைந்ததால், ஆசிரியர்கள் கூடுதல் 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, கணக்கெடுப்பு பணிகளை முழுமைப்படுத்தும் நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
English Summary
karnataka caste survey school leave