விஜய் வெளியே வரவே பயம் கொள்கிறார் - திமுக அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
DMK Duraimurugan TVK Vijay Karur
தவெக தலைவர் விஜய், தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியில் வர பயந்துகொண்டிருக்கிறார்” என்று திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தாவது, “மோர்தானா அணைப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்; குற்றச்செயல்களைத் தடுக்க காவல் நிலையமும் அமைக்கப்படும்” என்றார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் காணொலி மூலம் பேசியது குறித்து அவர், “குற்றமற்றவர் என்றால் தைரியமாக நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பார். ஆனால், தன்நெஞ்சே தன்னை சுடுகிறது என்பதால் வெளியே வர அஞ்சுகிறார்” என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை விமர்சித்த அவர், “அவருக்கு ஒன்றும் தெரியாது; யாரோ எழுதியதை வாசித்து வருகிறார்” என சிரித்துக்கொண்டு கூறினார்.
English Summary
DMK Duraimurugan TVK Vijay Karur