இந்தியாவில் பொருளாதாரம் உயரும்: உலக வங்கி வெளியிட்ட கணிப்பு!
india growth World Bank
2026 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த ஜூன் மாதத்தில் அது 6.3 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது.
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில், “இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக தொடர்ந்து இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
வலுவான உள்நாட்டு நுகர்வு, வேளாண்மை உற்பத்தி மேம்பாடு மற்றும் கிராமப்புறங்களில் ஊதிய உயர்வு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தெற்காசிய நாடுகளில் வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.