நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கும் வினைகள், உங்களை அறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை திமுக - அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DMK govt
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கழக ஆதரவாளரான சசிகுமார் அவர்களை ஸ்டாலின் மாடல் திமுக அரசு நேற்று கைது செய்தது.
நீதிமன்றம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை வழக்கு குறித்த எந்த தெளிவான தகவலும் காவல்துறையால் பதிவு செய்யப் படவில்லை.
நடு இரவில் அவசர அவசரமாக நடந்த இந்த கைதுக்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை.
சமூக ஊடகப் பதிவுகளுக்கு எடுக்கும் பாய்ச்சல், சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரியும், கிட்னி திருடும் குற்றவாளிகள் மீது என்றைக்காவது எடுக்கும் தைரியம் உண்டா இந்த திமுக அரசுக்கு?
காவல் நிலையத்தில் வைத்து, கீழே அமர வைத்து போட்டோ வெளியிடுவது என்ன அணுகுமுறை? என்ன சொல்ல வருகிறது திமுக அரசு? இது பாசிசப் போக்கு தானே?
கிட்னி திருடிய வழக்கில் தொடர்புள்ள உங்கள் கட்சிக் காரர்களை இப்படி அமர வைத்தீர்களா?
இன்று கூட பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் உங்கள் கட்சி பிரமுகருக்கு தொடர்புள்ளதாக செய்தி வருகிறதே.. அவரை இப்படி அமர வைத்து போட்டோ எடுத்து வெளியிடுவீர்களா?
நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கும் வினைகள், உங்களை அறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை திமுக.
நேற்று முதலே அவருக்கான சட்டரீதியான உதவிகளைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைத்து வரும் நிலையில், இன்று, இத்தருணம் வரை இந்த கைது நடவடிக்கை குறித்து தெளிவான விளக்கம் அளிக்கத் திராணியற்ற திமுக அரசை இப்பதிவின் வாயிலாக வன்மையான கண்டிக்கிறோம்.
நம்மில் ஒருவரை, இந்த பாசிச அரசின் கரங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்!
புரட்சித்தமிழர் வழிநிற்கும் தொண்டர்கள் நாங்கள். இதற்கும், எதற்கும் அஞ்சோம்!
நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கத்தின் தொண்டர்கள் நாம். இதையும் வெல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.