சென்னை-கொழும்பு விமானத்தில் திடீர் சிக்கல்...! பறவை மோதியதால் பரபரப்பு...!
Sudden problem Chennai Colombo flight Bird strike causes panic
சென்னையிலிருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியாவின் விமானம் 164 பயணிகளுடன் சென்றது. மேலும்,கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தின் மீது ஒரு பறவை மோதியது.
இந்த சம்பவத்தை தாமாகவே விமான நிலைய அதிகாரிகள் கவனித்துக் கொண்டு உடனடியாக பொறியாளர்களை அழைத்தனர்.மேலும், விமானத்தில் சிக்கிய பறவையின் உடலை எடுத்து, முதற்கட்ட ஆய்வினை செய்த பின்னர், விமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாதது என இலங்கை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பின் விமானம் அதிகாலை 3.20 மணிக்கு 147 பயணிகளுடன் சென்னை திரும்பியது. சென்னை தரையிறங்கியதும் விமானம் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் விமானத்தின் பேன் பிளேடில் சிறிய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தினர். அதுமட்டுமின்றி,பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கியிருந்தாலும், இந்த சம்பவம் விமானசேவை மற்றும் விமானப் பாதுகாப்பை பற்றிய பரபரப்பான விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
Sudden problem Chennai Colombo flight Bird strike causes panic