கடவுள் என்னைச் செய்ய வைத்தார்! -தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயன்ற வக்கீல் சர்ச்சை பேட்டி...!
God made me do Controversial interview lawyer who tried attack Chief Justice
உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்குத் தொடர்வின்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் முன்னிலையில் வக்கீல்கள் வழக்குகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ராகேஷ் கிஷோர் (71) என்ற வழக்கறிஞர் திடீரென எழுந்து, தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.

இந்த திடீர் சம்பவத்தால் நீதிமன்றம் பரபரப்பாகி, பாதுகாப்பு காவலர்கள் அவரை உடனே தடுத்து வெளியேற்றினர். மேலும் அங்கிருந்து வெளியேறும் போது அவர் தெரிவித்ததாவது,"சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்!”என்று கோஷமிட்டார்.இதில் தலைமை நீதிபதி கவாய், அதைக் குளிர்ந்த மனதுடன் எதிர்கொண்டு,“இப்படி நடந்தாலும் நம் கவனம் சிதறக்கூடாது; இது என்னை பாதிக்காது"என்று கூறி விசாரணையை தொடர்ந்து நடத்தினார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் பார் கவுன்சிலால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.அதன் பிறகு,ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் ராகேஷ் கிஷோர் தெரிவித்ததாவது,"கஜுராஹோ கோவில் வழக்கில் தலைமை நீதிபதி கூறிய கருத்து எனக்கு ஆழ்ந்த வேதனை அளித்தது.நான் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல.
ஆனால், இது ஒரு தெய்வீக சக்தியின் தூண்டுதல்.‘நாடு எரிகிறது, நீ தூங்குகிறாயா?’ என்று கடவுள் என்னைக் கேள்வி கேட்டார்.எனவே தான் இந்த செயல் நடந்தது. மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இது கடவுளின் விருப்பம்"இந்த அதிர்ச்சி சம்பவம் இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
God made me do Controversial interview lawyer who tried attack Chief Justice