ஆரம்பம்! 2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் மதுரையில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மதுரை உத்தங்குடியிலுள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது,"#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை" என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

general assembly will meet in Mamadurai to achieve a big victory in 2026 Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->