துக்கம்! ராஜேஷ் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு...! - ரஜினிகாந்த் அஞ்சலி - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் 'ராஜேஷ்'. அவருக்கு வயது 75 .சில காலமாக உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராமாபுரத்திலுள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.

இதில் நேற்று முன்தினம் காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.மரணமடைந்த நடிகர் ராஜேஷ் அவர்களின்  உடல், ராமாபுரம் கோத்தாரிநகரிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்றைய தினமே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜேஷ் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிலையில் இன்று, நடிகர் ரஜினிகாந்த் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ரஜினிகாந்த்:

அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் தெரிவித்ததாவது," நடிகர் ராஜேஷ் நல்ல மனிதர்; திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. ராஜேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர். சினிமா, அரசியல் ஆன்மிகம் என அனைத்தும் தெரிந்தவர். ராஜேஷ் தன் வாழ்நாள் முழுவதும் நிறைய விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொண்டார்.

என்னை அடிக்கடி சந்தித்து ஆரோக்கியமாக இருக்க யோசனைகளை தெரிவிப்பார். ராஜேஷ் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு" எனத் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajeshs death is a great loss to the film industry Rajinikanths tribute


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->