கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம் ..? தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா..? நீங்கள் ஆக்கினீர்களா..? சீமான் கேள்வி..!
Was Tamil language classical Did you make it classical Seemans question
'தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா..? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா..?, கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்', என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் சீமான் மேலும் கூறியதாவது: நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு பொரியல். சண்டை என்றால் தனித்து தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம். நீங்கள் கொண்டாடினால் நான் முதல்வர் ஆகிவிடுவேன். நீங்கள் கொண்டாடுவீர்களா..? திண்டாடுவீர்களா..? தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா..? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மத்தியில் காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது செம்மொழி என அறிவித்ததால், செம்மொழி ஆனதா..? தமிழ் செம்மொழி என அனைவரும் கூறுகின்றனர். நீங்கள் யார் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர என்று சீமான் பேசியுள்ளார்.

அத்துடன், வர்த்தகர்கள் மாநாட்டில், தமிழில் பெயர் எழுத சொல்லிவிட்டு ஆங்கில பெயரை அப்படியே தமிழில் எழுத சொல்கிறார் முதலமைச்சர். அனைத்து கடைகளிலும் எழுத்து தமிழ் ஆக இருக்கும். ஆனால் உச்சரிப்பு ஆங்கிலம் ஆக இருக்கும். எழுத்து ஆங்கிலம் ஆக இருக்கும். ஆனால், உச்சரிப்பு தமிழ் ஆக இருக்கும். தமிழ்நாடு என பெயர் வைத்து, மயங்க வைத்து மொத்தமாக முடித்துவிட்டீர்கள் என்று சரமாரியாக பேசியுள்ளார்.
மேலும், கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாள் என முதலமைச்சர் அறிவித்தால், கட்சிக்காரர்கள் ஏற்பார்கள்.ஆனால், மக்கள் ஏற்க மாட்டார்கள். என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மொழிக்காக உயிர்நீத்தவர் தாளமுத்து நடராஜன். அவர் இறந்த நாளை செம்மொழி நாளாக வைக்க வேண்டும் என்றும், அது தான் நடக்கும் என்றும், நீங்கள் ஆசைக்கு அறிவிக்க வேண்டியதுதான் என்று சீமான் நிருபர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Was Tamil language classical Did you make it classical Seemans question