இனியும் பிச்சை பாத்திரத்துடன் சுற்ற முடியாது, இதனை நட்பு நாடுகள் கூட ஏற்காது: பாகிஸ்தான் பிரதமர்..!
Pakistan Prime Minister says he can no longer walk around with a begging bowl even friendly countries will not accept this
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை சமாளிக்க சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மட்டும் அல்லாமல் உலக வங்கி மற்றும் ஐஎம்எப் போன்ற சர்வதேச நிதியத்திடம் உதவி செய்யும்படி கேட்டுள்ளது. அதனையடுத்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைத்தன.
இந்நிலையில், இனியும் பிச்சை பாத்திரத்துடன் சுற்ற முடியாது என்றும், இதனை நட்பு நாடுகள் கூட ஏற்காது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் குயிட்டா நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ஷெபாஸ் ஷெரீப் இவ்வாறு பேசியயுள்ளார். அத்துடன், பாகிஸ்தானின் அனைத்து கால கூட்டாளியாக சீனா உள்ளது என்றும், சவுதி அரேபியா நம்பகமான நட்பு நாடாக உள்ளதாகவும், துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும் இது பொருந்தும் என்றும் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்களுடன் வர்த்தகம், வணிகம், புதுமை, ஆராய்ச்சி வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் முதலீடுகள் மற்றும் லாபகரமான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள். பிச்சை பாத்திரத்துடன் அங்கு வருவதை அவர்கள் இனியும் விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இயற்கை மற்றும் மனித வளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த பொருளாதார நெருக்கடியை சுமக்கும் கடைசி நபராக, ராணுவ தளபதி ஆசிம் முனீருடன் இணைந்து நான் இருப்பேன் என்று அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதாக ஷெபாஷ் ஷெரீப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan Prime Minister says he can no longer walk around with a begging bowl even friendly countries will not accept this