டெல்லி கார் குண்டு வெடிப்பு: அல் பலாஹ் மருத்துவமனைக்கு வரும் நிதி குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவு..!
Enforcement Directorate orders probe into funds flowing to Al Falah Hospital
கடந்த 11-ஆம் தேதி தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 04 டாக்டர்கள் பணியாற்றிய அல் பலாஹ் மருத்துவமனைக்கு வரும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி செங்கோட்டை பகுதியில் சிக்னலில் நின்றிருந்த கார் வெடித்து சிதறியதில், காரை ஓட்டிவந்த உமர் உள்ளிட்ட 13 பேர் பலியாகியுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தாக்குதலில் ஈடுப்பட்டு, காரை இயக்கி வெடிக்கச்செய்தவன் காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் நபி என தெரிய வந்தது. அத்துடன், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும், இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அல் பலாஹ் மருத்துவமனைக்கு கிடைக்கும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இப்பல்கலைகழகத்தின் வரவு செலவு கணக்குகளையும்மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும், டில்லி போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளையும் பல்கலை குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

அல் பலாஹ் பல்கலைகழகத்தின் சமூக வலைதள பக்கத்தில், அந்நிறுவனம் என்ஏஏசி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கல்லூரிகள், பல்கலைகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து சான்று வழங்கும் தன்னாட்சி அமைப்பான என்ஏஏசி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க அந்த பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Enforcement Directorate orders probe into funds flowing to Al Falah Hospital