ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை...! - பிப்ரவரியில் ரூ.1.83 லட்சம் கோடி குவிந்தது...!
New record GST collection 1point83 lakh crore collected February
நாட்டின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் தொடர்ந்து உயர்வை நோக்கி நகர்கிறது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 8.1 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், உள்நாட்டு வர்த்தக மற்றும் பரிவர்த்தனைகளின் மூலம் கிடைத்த வருவாய் 5.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.36 லட்சம் கோடியாக உள்ளது.
அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வசூல் கணிசமாக 17.2 சதவீதம் அதிகரித்து ரூ.47,837 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், வரி செலுத்துநர்களுக்கு ரூ.22,595 கோடி ரீஃபண்ட் திருப்பி வழங்கப்பட்ட நிலையில், அதனை கழித்த பிறகு பிப்ரவரி மாதத்தின் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.61 லட்சம் கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி 28 வரை உள்ள 11 மாத காலத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 8.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் வருவாய் நிலைமை உறுதியாக முன்னேறி வருவதை இந்த எண்ணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
English Summary
New record GST collection 1point83 lakh crore collected February