ஹோர்முஸ் நீரிணையில் தீக்கிரையான எண்ணெய் கப்பல்...! - ஈரான் தாக்குதலில் 15 இந்தியர்கள் மீட்பு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக, ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இராக் பகுதிகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இந்த பதற்றநிலையிலேயே, ஓமன் கடற்கரைக்கு அருகே கடலில் கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அந்த கப்பல் தாக்குதலால் தீப்பற்றி எரிந்தது.கப்பலில் இருந்த 20 பேரில் 15 இந்தியர்கள் உட்பட அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர்

தாக்குதலில் 4 ஊழியர்கள் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் 5 பேர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏவுகணை தாக்குதல் மூலம் ஓமனின் துக்கம் துறைமுகம் பகுதியும் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வளைகுடா கடற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oil tanker catches fire Strait Hormuz 15 Indians rescued Iran attack


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->