'டபுள் என்ஜின்' என்ற டப்பா என்ஜின் மாநிலங்களில் இதுபோன்ற வளர்ச்சியை காட்ட முடியுமா...? - மு க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரபல ஆங்கில வார இதழ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில், மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழக வளர்ச்சி குறித்து விரிவாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தேசிய மட்டத்தைக் கடந்தும் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை வரையிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சிக்கு பொதுமக்களின் வலுவான ஆதரவு நிலவி வருவதாக தெரிவித்தார்.தமிழகம் வளர்ச்சியின் அனைத்து அளவுகோள்களிலும் முன்னிலை வகித்து, ‘நம்பர் ஒன்’ மாநிலமாக திகழ்கிறது என்பதை மத்திய பா.ஜ.க. அரசே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘டபுள் என்ஜின் அரசு’ என சொல்லிக்கொள்ளும் மாநிலங்களால் கூட இத்தகைய முன்னேற்றத்தை காண்பிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசின் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தமிழ்நாடு தன்னம்பிக்கையுடன் வளர்ச்சி பாதையில் சென்றுள்ளதாக வலியுறுத்தினார்.

அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ வளர்ச்சியே அரசின் முதன்மை நோக்கம் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மையப்படுத்தப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can such development shown double engine states MK Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->