டில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது: காங்கிரஸ் எம்பி சசி தரூர்..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை தப்பிவிடக்கூடாது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும், கூறியதாவது: பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் அரசு என்ன செய்யும் என்று நான் யோசிக்க விரும்பவில்லை என்றும், ஆனால், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. குண்டுவெடிப்பில் அவர்களில் சிலர் இறந்தனர் என்பது நமக்கு தெரியும். சில திட்டங்கள் நன்கு திட்டமிடப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்; இந்த தாக்குதல் திட்டங்களில் சில தடுக்கப்பட்டுள்ளன. அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

ஆனாலும், மிக முக்கியம் நமது குடிமக்களை பாதுகாக்க வேண்டியது எனவும், ஆப்பரேஷன் சிந்தூரின் போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஒரு இலக்காக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் உயிர்களை காக்க விரும்புபவர்களிடம் இருந்து பயங்கரவாதிகளுக்கு எந்த மன்னிப்பும், பாதுகாப்பும் கிடைக்காது என்றும் சசி தருர் கூறியுள்ளார். அத்துடன், டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் இந்த விஷயத்தில் நாம் ஒற்றுமையாக நிற்பது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் விழிப்புடன் இருப்பதுடன், இந்திய குடிமக்கள் என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை அமல்படுத்துபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம் என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MP Shashi Tharoor says those who carried out the terrorist attacks in Delhi should not go unpunished


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->