பிக்பாஸ் பிரபலம் தினேஷ் வசமாக சிக்கினார்! அரசு வேலை பெயரில் ரூ.3 லட்சம் மோசடி குற்றச்சாட்டு...!
Bigg Boss celebrity Dinesh caught Accused cheating 3 lakh name government job
பண மோசடி மற்றும் தாக்குதல் புகாரின் பேரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் மூலம் பரிச்சயமான நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகிலுள்ள தண்டையார்குளம் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்ற நபர் அளித்த புகாரில், கடந்த 2022-ஆம் ஆண்டில் நடிகர் தினேஷ், “அரசு வேலை வாங்கி தருகிறேன்” என்ற பெயரில் ரூ.3 லட்சம் பணம் பெற்றதாகவும், ஆனால் வேலை கிடைக்காததுடன், பணத்தை திருப்பி கொடுக்காமல் தன்னை அலைக்கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பணத்தை திரும்பக் கேட்டபோது தினேஷ் தன்னை தாக்கியதாகவும் கருணாநிதி போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் பணகுடி போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் நடிகர் தினேஷை கைது செய்தனர்.
தற்போது அவர் மீது மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.சின்னத்திரையில் பல பிரபல தொடர்களில் நடித்ததுடன், பிக்பாஸ் சீசன் 7-இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார் தினேஷ். இப்போது, அவரை சுற்றியுள்ள இந்த கைது செய்தி சின்னத்திரை உலகையே அதிரவைத்துள்ளது.
English Summary
Bigg Boss celebrity Dinesh caught Accused cheating 3 lakh name government job