தோனி குறித்து சி.எஸ்.கே அணி வெளியிட்டுள்ள வீடியோ; அதிருப்தியில் ரசிகர்கள்..!
Fans are unhappy with the video released by CSK regarding Dhoni
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல், ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 18வது ஐ.பி.எல். போட்டியில் 18 வருடங்களுக்கு பின்பு பெங்களூரு அணி சாம்பியன் வென்று அசத்தியது. ஆனால், 05 முறை சாம்பியன் வென்ற சி.எஸ்.கே அணி கடைசி இடத்தை பெற்று முதல் அணியாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.
இதனால் அணியின் நிர்வாகம் மற்றும் வீரர்களின் தேர்வு, நடந்த ஒவ்வொரு போட்டிகளில் பெற்ற அவமானங்கள் என சென்னை அணியின் ரசிகர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஒவ்வோர் ஆண்டும் ஐ.பி.எல்.தொடர் தொடங்கும் போதும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனாகவும் கடந்த ஆண்டு சில போட்டிகளின் கேப்டனாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் மஹேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பரவலாக பேசப்படும். அதே நேரம் பல புரளிகளும் கிளப்பப்படும். இணையதளங்களின் ரசிகர்களிடையே சண்டையும் வலுப்பெறும்.

அதே பார்முலா 19-வது தொடருக்கான போட்டி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக 44 வயதை எட்டியிருக்கும் தல தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தத்தர். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், அவர் கடந்த சில சீசன்களாகவே எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான (2025) ஐபிஎல் தொடரில் சென்னை அணி, முதல் முறையாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறியதைத் தொடர்ந்து, மீண்டும் தோனி கேப்டனானார். அதன் பின்பும் அணைக்கு ஏற்பட்ட சரிவுகளால் தோனியின் வயது பற்றியும் ஓய்வும் குறித்தும் கூடுதலாகச் சேர்ந்து விவாத பொருளாக மாறியது.

43 வயதான அவர் கடைசி பேட்டிங் வரிசையில் இறங்கியது வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது என்றும் சொல்லலாம். எனினும் ஓய்வு குறித்த வதந்தி தொடர்பாக பேசிய தோனி, “இந்த ஐபிஎல் முடிந்த பிறகு, என் உடல் தகுதி தாங்குமா என்பதைப் பார்க்க இன்னும் 06-08 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது முடிவு செய்ய எதுவும் இல்லை” எனத் தெரிவித்து சென்னை ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார்.
ஆனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் (2026) சீசனிலும் தோனி விளையாடுவதை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது, அந்த வீடியோ பதிவில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று பல்வேறு மொழிகளில் போன் செய்து ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் 'One Last Time' என்பதை மோர்ஸ் கோடு வடிவில் குறிப்பிட்டு சென்னை அணி பதில் அளித்துள்ளது. இதனால், அடுத்த சீசனில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த 19-வது சீசன்தான் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Fans are unhappy with the video released by CSK regarding Dhoni