கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு 'செவாலியே விருது' வழங்கப்பட்டது..! - Seithipunal
Seithipunal


64 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும், இந்தியளவில் புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக விளங்கி வருபவர் தோட்டா தரணி. இவரது கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ”செவாலியே” விருது அறிவிக்கப்பட்டது.

ஓவியரான தோட்டா தரணி, தனது கலை இயக்கத்தின் மூலம் பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர். அவரது செட்கள், உண்மையானது போலவே தத்ரூபமாக இருக்கும் என்ற அளவிற்குப் பல மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி) கலை வடிவமைப்பை மேற்கொண்டு விருதுகளையும் வென்றுள்ளார்.

ஓவியரான தோட்டா தரணி, தனது கலை இயக்கத்தின் மூலம் பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர். அவரது செட்கள், உண்மையானது போன்ற தத்ரூபமாக இருக்கும் என்ற அளவிற்குப் பல மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி) கலை வடிவமைப்பை மேற்கொண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார். 

பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் விதமாக செவாலியர் (Chevalier dans l'Ordre des ArtsetdesLettres) விருதை 1957-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்ட சிலர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டுப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்காட்சி நாளை (நவம்பர் 14-ஆம் தேதி) வரை அங்கு நடைபெறும். கலைத்துறையில் தோட்டா தரணிக்கு கிடைத்த இந்த உயரிய கௌரவம் தென்னிந்தியத் திரையுலகிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thotta Dharani was awarded the Chevalier Award


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->