ரஜினி - கமல் இணைவு படத்தில் அதிரடி திருப்பம்! இயக்குநர் சுந்தர்.சி விலகல் பெரும் பேசுபொருள்..! - ரசிகர்கள் அதிர்ச்சி!
Rajinikanth Kamals film gets dramatic twist Director SundarCs exit big topic discussion Fans shocked
சினிமா உலகையே உறைய வைத்த செய்தி இது.ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், கமல்ஹாசன் மேற்பார்வையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த “தலைவர் 173” திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ சில நாட்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், அதே உற்சாகத்தை நொறுக்கிவிட்டார் இயக்குநர் சுந்தர்.சி.தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் அவர்,“மிக கனிந்த இதயத்துடன் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.

நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் பெருமை. இந்த வாய்ப்பை அளித்த கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்துக்கும் எனது இதயபூர்வ நன்றிகள்.
என்னிடம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்கிறேன்.”இந்த அறிவிப்புடன், ரஜினி–சுந்தர்.சி இணைவு சாத்தியமில்லை என்பது உறுதி!
ரசிகர்கள் மத்தியில் தற்போது “தலைவர் 173”-இன் புதிய இயக்குநர் யார்?” என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது.
English Summary
Rajinikanth Kamals film gets dramatic twist Director SundarCs exit big topic discussion Fans shocked