செம்ம லா! புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்க கூடாது... நானே புதிய கட்சிதான்...! - கமல்ஹாசன்
Dont criticize new parties I am a new party Kamal Haasan
நடிகரும் ,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான 'கமல்ஹாசன்' அவர்கள், 'தக்லைப்' பட பணி நிமித்தம் காரணமாக மலேசியாவுக்கு செல்ல, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

கமல்ஹாசன்:
அப்போது நிருபர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது," 'தக்லைப்' படம் நல்லா இருக்கும் என்று நம்பிதான் மக்கள் முன்னாடி விடுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிற எல்லா ஆதாரங்களும் எங்க கிட்ட இருக்கு. இப்பகூட ப்ரோமோஷனுக்காக மலேசியா, துபாய் செல்ல உள்ளேன்.
அதன்பிறகு வெளியீட்டுக்கு தயாராகி வருவேன்.நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும். அது ஒரு பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் நிறைய புதிய கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த கமல் அவர்கள்,"நானே புதிய கட்சி தான். புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது" என்று தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
English Summary
Dont criticize new parties I am a new party Kamal Haasan