579 இடங்கள் காலியாக காத்திருக்கின்றன…! பி.எட். & எம்.எட். சேர்க்கைக்கு இன்னும் ஒரு வாய்ப்பு...!-அமைச்சர் கோ.வி.செழியன்
579 seats waiting filled One more chance for BEd MEd admissions Minister KV Chezhiyan
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது,"முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், 2025-26 கல்வியாண்டுக்கான பி.எட். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20-ஆம் தேதி சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதல் கட்ட முடிந்த நிலையில், தற்போது 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் காலியாக உள்ளன.
இவ்விடங்களில் இணையத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்காக, இன்று (15.09.2025) முதல் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இணையவழி விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி www.tngasa.inஎன்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், எம்.எட். படிப்பிற்கான காலியிடங்களிலும் மாணவர்கள் இணையவழி விண்ணப்பம் செய்து சேர்க்கை பெறுவதற்கான வசதி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும். இவ்வாய்ப்பை தவறவிடாமல் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
579 seats waiting filled One more chance for BEd MEd admissions Minister KV Chezhiyan