ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: ராணுவத்தின் நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை' என்ற குறுகியகால மற்றும் விரைவான ராணுவ நடவடிக்கையில் இந்தியா பெற்ற தீர்க்கமான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் பொது நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் போது, பாகிஸ்தானுக்கு எதிரான, ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம் என்று ஆளுநர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிராக, சகிப்புத்தன்மையற்ற தனது உறுதியை வெளிப்படுத்தியதோடு, இந்தியா, பாகிஸ்தானை வெளிப்படையாகத் தண்டித்தது என்றும், இந்தியாவின் இந்த நடவடிக்கை, அதன் உள்நாட்டு ராணுவத் திறன்களை வெளிப்படுத்தியதாகவும், மேலும் அதன் ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் நமது தேசியத் தலைமை மற்றும் ஆயுதப் படைகள் மீது ஒவ்வொரு இந்தியரின் கூட்டு நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது ஒரு திருப்புமுனை தருணம் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல ஆண்டுகளாக அடக்குமுறைகளிலிருந்து விடுபட்ட போதும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான தவறான செயல்களில் போதுமான வகையில் எதிர்வினையாற்றாதது மற்றும் முடிவெடுக்க இயலாதது போன்ற நிலைகளில் இருக்கிறது. இதற்கு மாறாக பிரதமர் மோடி தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டுள்ளது.

மேலும், ராணுவ வலிமை மற்றும் ராஜீய செல்வாக்கு உள்ளிட்ட தேசிய வளங்களை தேச நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்துவதற்கான தெளிவு, துணிச்சல், உறுதிப்பாடு, அரசியல் விருப்பம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ரவி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor RN Ravi is proud that it is a turning point that shows the confidence of the army


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->